[X] Close

தூய்மை பாரத திட்டம்: தூத்துக்குடிக்கு தேசிய விருது


clean-india-tuticorin-award

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 11:10 am
  • அ+ அ-

தூத்துக்குடியில் மத்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்திய தூய்மை பாரத இயக்க 2 நாள் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:

ஜனவரி 1-ம் தேதி முதல் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துவது குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூய்மை பாரதம் இயக்க திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் இந்திய அளவில் 7-வது இடமும், தென்னிந்திய அளவில் 2-வது இடமும் பிடித்து மத்திய அரசின் சான்றிதழை பெற்றுள்ளது, என்றார் ஆட்சியர். பின்னர், கோடாங்கி கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகளை பார்வையி ட்டார்.

இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) பரிதா செரின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.முத்துலட்சுமி, மத்திய அரசு கள அலுவலக தகவல் கள விளம்பர உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ், வ.உ.சி. கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு, தூத்துக்குடி பெண்கள் ஆலோசனை குழுமம் செயலாளர் ஜி.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close