[X] Close

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது


kumbakonam-govt-hospital-poor-maintanence

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்த வார்டு கட்டிடம்.

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 10:52 am
  • அ+ அ-

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டிடத்தில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது.

கும்பகோணத்திலுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 1996-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.13 லட்சத்தில் 24 படுக்கைகள் கொண்ட "வார்டு 500" என்ற கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த கட்டிடத்தில் நேற்று சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள், உறவினர்கள் காத்திருந்தனர். மாலை 4 மணியளவில் திடீரென அக்கட்டிடத்தின் மேற்கூரையின் சிமென்ட் காரை 5 அடி சுற்றளவுக்கு பெயர்ந்து கீழே விழுந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த நோயாளிகள் மற்றும் உடனிருந்த உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடினர். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அக்கட்டிடத்தின் மேற்கூரை முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக அக்கட்டிடத்திலுள்ள நோயாளிகளை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close