[X] Close

இன்று 2-வது நினைவு நாள்: ட்விட்டரில் ட்ரெண்டாகிறது #Amma #Jayalalithaa


jayalalitaas-second-anniversary-twitter-trends

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Dec, 2018 11:12 am
  • அ+ அ-

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2016 செப்டம்பர் 22-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.

அவரது நினைவு நாளை ஒட்டி ட்விட்டரில் இந்திய அளவில் #Jayalalithaa ட்ரெண்டாகிறது. சென்னை ட்ரெண்ட்ஸைப் பொருத்தவரை #Amma #Jayalalithaa ஆகிய இரண்டு ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகின்றன.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் நினைவு நாளுக்காக அதிமுக  சார்பில் சென்னை அண்ணா சாலையில் அமைதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.  இந்தப் பேரணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் பலரும் கருப்புச் சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பலரும் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் 'உறுதியானவர்', ‘எதிர்நீச்சல் போட்டவர்’ என்று அவரது நினைவலைகளை பகிர்ந்த வண்ணம் வருகிறார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close