[X] Close

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.48.65 கோடி சேர்ந்தது


cm-relief-fund-update

  • kamadenu
  • Posted: 04 Dec, 2018 12:06 pm
  • அ+ அ-

புயல் சீரமைப்புக்காக இதுவரை ரூ.48 கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 345 நிவாரணத் தொகை முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்ந்துள்ளது.

கடந்த 28-ம் தேதி வரை ரூ.33 கோடியே 66 லட்சத்து 80 ஆயிரத்து 583 அளவுக்கு நிதி கிடைத்தது. தொடர்ந்து, பலரும் நிதி வழங்கி வருகின்றனர். தொடர்ந்து, நவ.29-ம் தேதி ரூ.14 லட்சம் நிதி வழங்கப்பட்டது. நவ.30 மற்றும் டிசம்பர் 1-ம் தேதியில், ரூ.2 கோடியே 18 லட்சம் வரை பலரும் நிதி வழங்கினர்.

பேரவைத்தலைவர், அரசு கொறடா, அதிமுக எம்எல்ஏக்கள், நியமன உறுப்பினர் ஆகியோரது ஒரு மாதச் சம்பளத்தின் மொத்த தொகை ரூ.86 லட்சத்து 62 ஆயிரத்து 500-க்கான காசோலை வழங்கப்பட்டது.

இதுதவிர, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ. 1 கோடியே 10 லட்சத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். சுந்தரம் பைனான்ஸ் சார்பில் தலைவர் எஸ்.விஜி ரூ.2 கோடியே 40 லட்சம், சாஸ்த்ரா பல்கலைக்கழக தலைவர் ஆர்.சேதுராமன் ரூ. 1 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 543, லூகாஸ் டிவிஎஸ் சார்பில் டி.கே.பாலாஜி ரூ.1 கோடி, சிங்கப்பூர் ஹனீபா நிறுவனம் சார்பில் ஓ.கே. முகமது ஹனீபா ரூ.1 கோடி வழங்கினர்.

நேற்று ஒருநாளில் மட்டும் ரூ. 8 கோடியே 53 லட்சத்து 93 ஆயிரத்து 243-க்கான நிதி வழங்கப்பட்டது.

இதுவரை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, ரூ.48 கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 345-க்கான நிதி சேர்ந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close