[X] Close

‘சென்னை மெட்ரோ’வில் தடம் பதிக்கும் பெண் பொறியாளர்கள்


women-engineers-in-chennai-metro

  • kamadenu
  • Posted: 04 Dec, 2018 10:24 am
  • அ+ அ-

பெண்கள் பல துறைகளிலும் கள மிறங்கிச் சாதனை படைத்துவரு கின்றனர். உலகத் தரத்தில் உரு வாக்கப்பட்டு மக்கள் பயன்பாட் டுக்கு வந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் சேவையிலும் மகத்தான சேவையாற்றி வருகின்றனர் பெண் பொறியாளர்கள்.

நாகர்கோவில், பட்டுக் கோட்டை, ராஜபாளையம், செய்யூர் என தமிழகத்தின் பல நகரங்களை சேர்ந்த பெண் பொறியாளர்கள், ‘‘வரலாற்று சிறப்புமிக்க மெட்ரோ ரயில் சேவையில் எங்களது பங்களிப்பு இருப்பது பெருமையாக இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டப் பணியில் தங்கள் அனுபவம் மறக்க முடியாதது’’ என்று உற்சாகத்துடன் கூறுகின்றனர். இதுகுறித்து அவர் கள் கூறியதாவது:

இ.பிரிஜிட்டா: சிவில் பொறியி யல் துறை வித்தியாசமான திட்டப் பணி என்பதால், ஆர்வத்துடன் தேர்வு செய்தேன். இதுபோன்ற பணி களைச் செய்வதானால், டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு தான் செல்லவேண்டும். எனக்கு சென்னையில் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடுமையான வேலைகளை ஆண்கள்தான் செய்வார்கள் என்ற காலம் மாறிவிட்டது. மெட்ரோ ரயில் சுரங்கத்தில் நாங்களும் திறமை யாக பணியாற்றி வருகிறோம்.

ஸ்ரீமதி விஜயகுமார், பி.எம்.பாரதி: மெட்ரோவில் ஆரம்ப கட்டத்தில் இருந்தே பணியாற்றி வருகிறோம். 2015-ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோதிலும், நாங் கள் பணியாற்றியதை மறக்கவே முடியாது. ஏனென்றால், சுரங்கம் தோண்டும் பணியின்போது, பணியை திடீரென நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால், சுரங்கத்தில் மழைநீர் புகுந்துவிடும். எனவே, பணியை நிறுத்தாமல் தொடர்ந்து பணியாற்றினோம்.

சென்ட்ரல், நந்தனம் போன்ற இடங்களில் மெட்ரோ சுரங்கத்தில் 90 அடி ஆழம் வரை நாங்கள் பணியாற்றிய இடத்தில் தற்போது மெட்ரோ ரயில் ஓடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை வாழ்நாளில் மறக்க முடியாத பணியாகவும், பெருமையாகவும் கருதுகிறோம்.

கே.யோகாம்பாள்: ஒரு வேலையை விட்டு, உடனே வேறு துறைக்கோ, வேலைக்கோ பெண் கள் திடீரென மாறமாட்டார்கள். அதனால் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்து வம் அளிக்கப்படுகிறது. பணியிடத் தில் உரிய பாதுகாப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் அளிக்கிறது. சக ஆண் ஊழியர்களும் பக்கபலமாக இருக்கின்றனர். தேவைப்படும் போது, உதவியாக இருந்து, உரிய ஆலோசனைகளையும் வழங்கு கின்றனர்.

என்.பொன்னி, ஆர்.அர்ச்சனா: ஆரம்பத்தில் மெட்ரோ ரயில் பணிக்கு செல்கிறோம் என கூறி யதும் குடும்பத்தினர் பயந்தனர். எங்களுக்கு அங்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. பெரிய குழுவாகத்தான் பணியாற்றுவோம் என பெற்றோரிடம் கூறிய பிறகு தான் ஒப்புக்கொண்டு எங்களை அனுப்பினர். தற்போது மெட்ரோ ரயில் திட்டப் பணியில் சாதித்து வருகிறோம்.

பி.சர்மிளா, எஸ்.ராஜலட்சுமி: பொறியியல் படித்தால் வேலை கிடைப்பதில்லை என்பதை ஏற்க மாட்டோம். கடுமையாக உழைத் தால் நிச்சயம் வேலை கிடைக்கும். சுரங்கம் போன்ற களப்பணியில் ஆண்களுக்கு இணையாக பணி யாற்றுவது சவாலானது. வீட்டி லேயே முடங்கி இருக்காமல், தைரியம், நம்பிக்கையோடு பெண் கள் வெளியே வந்தால், மேலும் சாதிக்கலாம்.

ரேன்ஜூஷா: பொறியியல் கல்லூரியில் படித்தது வேறு, இங்கு களத்தில் நடைமுறையில் பணியாற்றுவது வேறு.

முதல் நாளில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பணியை தொடங்கியபோது பிரம்மாண்டமாக உணர்ந்தேன். தற்போது, இத்துறையில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

பாத்திமா: பொறியியல் கல்லூரி யில் சேரும்போது, ‘சிவில் பிரிவு வேண்டாம். கட்டிடம் போன்ற பணிகளைச் செய்ய கஷ்டமாக இருக்கும்’ என்று கூறி பெற்றோர் மறுத்தனர். நானோ, ‘படித்தால் சிவில் மட்டுமே படிப்பேன்’ என அடம்பிடித்து படித்தேன். விரும்பி படித்ததால், கஷ்டமான பணியாக இருந்தாலும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றி வருகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close