[X] Close

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்ததால் சர்ச்சை: பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் காவலரின் விருப்ப ஓய்வு ஏற்பு


lady-police-retires-after-controversy

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 13:29 pm
  • அ+ அ-

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறை வுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் காவலர் காவல் துறையிலிருந்து விருப்ப ஓய்வில் சென்றார்.

திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் செல்வராணி. கருணாநிதி மறைந்தபோது இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியான இவரது பதிவு வைரலாக பரவியது.

இந்நிலையில், செல்வராணி திருச்சி மாநகர காவல்துறையில் இருந்து மத்திய மண்டல காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, பணியிட மாற்றத்தை ஏற்க மறுத்த செல்வராணி, விருப்ப ஓய்வில் செல்வதாக காவல்துறைக்கு கடிதம் அளித்தார். அதன்பின் 3 மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். இந்நிலையில் விருப்ப ஓய்வு ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான கடிதம் நேற்று முன்தினம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து செல்வராணிக்கு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து செல் வராணி கூறியபோது, "கருணாநிதிக்கு இரங்கல் கவிதை பாடியதற்கு விளக்கம் கேட்டு எனக்கு மெமோ அளித்தனர். அதற்கு பதில் அளிப்பதற்குள், திடீரென என்னை பணியிட மாற்றம் செய்தனர்.

அதுகுறித்து விளக்கம் தருவதற்குள் எப்படி பணியிட மாற்றம் செய்யலாம் என அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் சரியான பதில் சொல்ல வில்லை. என் பேச்சுரிமை பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன். பணியில் சேர்ந்தால் மீண்டும், மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு பழி வாங்கப்படலாம் என்பதால் குடும்பத்தின் நலன்கருதி பணியிலிருந்து விலகி விட்டேன். இதற்கு முன்னர், ஜெயலலிதா மறைந்தபோது நான் கவிதை வாசித்ததற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்றார்.

செல்வராணி

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close