[X] Close

கமலுக்கு தகுதியில்லை; ஸ்டாலின் மன்னிப்பு கேக்கணும் - எச்.ராஜா ஆவேசம்


kamal-stalin-raja

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 12:23 pm
  • அ+ அ-

பிரதமரைப் பற்றி பேசுவதற்கு கமலுக்கு தகுதியில்லை. பிரதமர் பற்றி பேசியதற்கு ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையெனில், ஸ்டாலினின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுவேன் என்று எச்.ராஜா தெரிவித்தார்.

பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்ததாவது:

கஜா புயல் பாதித்த 6 மணி நேரத்துக்குள், பாஜகவினர்தான் சீரமைப்புப்பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் 17 நாட்கள் கழித்து கமல்ஹாசன் சென்று இப்போதுதான் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அப்பேர்ப்பட்ட கமல், பிரதமர் மோடியைப் பற்றியும் அவர் கஜா புயலால் பாதித்த பகுதிகளுக்கு வரவில்லை என்றும் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. பிரதமர் மோடியைப் பற்றி பேசுவதற்கு கமலுக்குத் தகுதியில்லை.

திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி ஏன் வரவில்லை, பாதிக்கப்பட்ட மக்களை ஏன் பார்க்கவில்லை என்று கேட்டு வருவதுடன் தொடர்ந்து மோடியை அவதூறாகப் பேசிவருகிறார்.

மோசடியைப் பேசியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், ஸ்டாலின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டுவேன்.

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close