[X] Close

புயல் சேதம்; அமிதாப், அமீர்கானிடம் பேசியிருக்கிறேன்; கமல் நம்பிக்கை


gaja-delta-kamal

கமல்ஹாசன்

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 15:05 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கஜா புயலால் சேதமடைந்த டெல்டா மாவட்டங்களின் நிலை குறித்து நண்பர்கள் அமிதாப்புடனும் அமீர்கானுடனும் தெரிவித்திருக்கிறேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் டெல்டா மாவட்டங்களைப் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அப்போது கமல் தெரிவித்ததாவது:

கஜா புயலின் இழப்புகளில் இருந்து டெல்டா மாவட்ட விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். அதேசமயத்தில், மனமொடிந்து போயிருக்கிற இவர்களுக்கு கவுன்சலிங் மிகமிக அவசியம். இவர்களின் மனங்களை வேகமாக மீட்டெடுக்கவேண்டும்.

நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் வேகம் போதாது. இன்னும் வேகமாகச் செயல்படவேண்டும். கஜா புயலால் பாதித்த சேதங்களைப் பார்க்கும் போது இதை பேரிடர் என்றுதான் அறிவிக்கவேண்டும். அப்படி அறிவித்தால்தான், இழந்ததற்கான நஷ்ட ஈடு ஓரளவேனும் மக்களுக்குக் கொடுக்கப்படும் விதமாக அது இருக்கும்.

ஒரு நாடு, ஒரு மக்கள் என்று ஒரு நினைப்புடன் இங்கு உதவி செய்யவேண்டும். எல்லோரும் உதவ வேண்டும். திரையுலகைச் சேர்ந்த என்னுடைய நண்பர்கள் அமிதாப்பிடமும் அமீர்கானிடமும் கஜா புயல் குறித்தும் டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் அவலம் குறித்தும் தெரிவித்திருக்கிறேன்.

தன்னார்வலர்கள் இன்னும் வந்து டெல்டா விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close