[X] Close

பொன்.மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு!- எச்.ராஜா மகிழ்ச்சி ட்வீட்


pon-manikavel-s-service-extended-h-raja-welcomes-the-move

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Nov, 2018 15:02 pm
  • அ+ அ-

பொன்.மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில் அவர் இன்னும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக தொடர்வார் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளையும் புதிய வழக்குகளையும் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக எச்.ராஜா தனது ட்விட்டரில், "இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டு பதவி நீட்டிப்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி அளிக்கின்ற விஷயம். வரவேற்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close