[X] Close

டிசம்பரில் எப்பொழுது மழை பெய்யும்? - 4-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வாளர் செல்வகுமார்


rain5

  • நெல்லை ஜெனா
  • Posted: 30 Nov, 2018 15:00 pm
  • அ+ அ-

சென்னை

டிசம்பர் 4-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது எதிர்பார்க்கும் படியே தீவிரமடைந்தால் சென்னை மற்றும் வட தமிழக பகுதியில் கூடுதல் மழையை கொடுக்கும் எனவும் தானியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து அவர் கூறியதாவது

மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மெல்ல விலகுவதால் தமிழக கடலோர பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பெய்த மழை விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மழை இருக்காது.

டிசம்பர் 4-ம் தேதி தெற்கு இலங்கை பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அப்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எதிர்பார்ப்பது போலவே நிகழ்வுகள் சரியாக அமைந்தால், காற்றழுத்த தாழ்வு நிலை வலிமையடைந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிவு இருக்கும்.

சென்னையில் தொடங்கி படிப்படியாக மற்ற பகுதிகளில் மழை பெய்யும். குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம். அதுபோலவே வேலூர் உட்பட வட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

இதன் பிறகு, டிசம்பர் 12-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் மழை பெய்யலாம்.

பின்னர், 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்களில் மழை

டிசம்பர் இறுதியில் மற்றுமொரு வலிமையான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக சாதகமான சூழல் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் ஜனவரி 1-ம் தேதி வரை மழை இருக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் தென் மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும்.

தென் மாவட்டங்களில் மழை குறைவாக உள்ளதே என வருத்தப்படும் விவசாயிகளுக்கு வரப் பிரசாதமாக இந்த மழை அமையும். இந்த மழையின் போக்கு எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கும் என்பதை சில நாட்களுக்கு பிறகே கணிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.   

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close