[X] Close

அரசுப் பள்ளிகளுக்கு துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


sanitary-workers-for-government-schools

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 11:05 am
  • அ+ அ-

கோவை மாவட்டத்தில் 1,200 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், 250 உயர்நிலைப் பள்ளிகளும், 125 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 90 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கழிவறைகள் கட்டி வைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை பராமரிக்க போதியளவு துப்புரவுப் பணியாளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துப்புரவுப் பணியாளர்களை பள்ளித் தலைமை ஆசிரியர்களே நியமித்துக்கொள்ள அனுமதியளித்த போதிலும், ரூ.1,500 மட்டுமே மாத ஊதியமாக அரசு நிர்ணயித்துள்ளதால், சொற்ப ஊதியத்துக்கு வேலை செய்ய துப்புரவுப் பணியாளர்கள் பணிக்கு வர முன்வருவதில்லை என்று தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.

இது குறித்து தமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். செந்தூரன் கூறும்போது, ‘பள்ளிகள் மூலம் நியமிக்கப்படும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசு கொடுக்கும் ஊதியத்துடன், ஆசிரியர்கள் ஒருவருக்கு ரூ.100 வீதம் சேகரித்து, ரூ.5 ஆயிரம் வரை ஊதியம் கொடுக்கிறோம். அனைத்துப் பள்ளிகளுக்கும், நிரந்தர துப்புரவுப் பணியாளர்களை அரசே நியமனம் செய்து, அவர்க ளுக்கு ஊதியம் கொடுத்து, கழிவறைகள் மற்றும் பள்ளி வளாக ங்களை சுத்தமாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தமிழக ஆசிரியர் கூட்டணி பேரூர் கல்வி மாவட்ட செயலர் எம்.ராஜசேகரன் கூறும்போது, ‘அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கும் பராமரிப்பு நிதியானது, கழிப்பிட வசதி மட்டுமல்லாது வகுப்பறைகள், மேஜை, நாற்காலிகள், ஜன்னல், கதவு போன்றவற்றை பழுது பார்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு நிதியை தனித்தனியாக பகிர்வதால், கழிவறை பராமரிப் புக்கு குறைந்த நிதியே கிடைக்கிறது. அதைக் கொண்டு முழுமையான பராமரிப்பை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கழிப்பிட பராமரிப்புக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்றார்.

மானியம் ஒதுக்கீடு

2017-18-ம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ், சமக்கிர சிக் ஷா அபியான் மூலம் பள்ளி மானியம் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1-14 மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,500, 15-100 மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரம், 100-250 மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம், 250-1000 மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு ரூ.75 ஆயிரம், 1000-க்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“இந்த நிதியைக் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கழிப்பறையை பராமரித்தல், வகுப்பறைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தகவல் தெரிவித்தனர் கல்வித்துறை அதிகாரிகள்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close