[X] Close

பாதிக்கப்பட்ட கொடைக்கானல் மக்களைப் பார்க்க ஆளுங்கட்சியும் வரலை; திமுகவும் வரலை - பிரேமலதா விஜயகாந்த்


dmdk-premalatha

பிரேமலதா விஜயகாந்த்

  • kamadenu
  • Posted: 27 Nov, 2018 11:35 am
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல் மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்கு, ஆளுங்கட்சியும் வரவில்லை. ஆண்ட கட்சியான திமுகவும் வரவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கஜா புயலின் தாக்கம் என்பது டெல்டா மாவட்டங்களையும் தாண்டி, திண்டுக்கல், கொடைக்கானல் வரையும் சென்றது. வத்தலகுண்டு - கொடைக்கானல் சாலைகள், பழநி - கொடைக்கானல் சாலைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டன. எட்டுநாட்களுக்குப் பிறகுதான் சாலைகள் சீரமைக்கப்பட்டன.

இந்த நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரின் மகன் பிரபாகரன் உள்ளிட்டோ கொடைக்கானல் பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த், நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

கொடைக்கானல் பகுதியும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கே பத்துநாட்களாகியும் இன்னும் மின்சாரம் கொடுக்கப்படவில்லை. ஆளுங்கட்சியினர் ஒருவர் கூட,  மக்களைப் பார்த்து ஆறுதல் கூட சொல்லவில்லை. அதேபோல ஆண்ட கட்சியான திமுகவினரும் வந்து பார்க்கவில்லை. இதனால் இந்த இரண்டுக் கட்சிகள் மீதும் கொடைக்கானல் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close