[X] Close

ஜோத்பூர் சென்றது ரயில்வே போலீஸ்; கெட்டுப்போன இறைச்சி அனுப்பியது யார்?- ஏஜெண்டுகளிடம் விசாரணை


jodhpur-meat-enquiry

ரயிலில் வந்த இறைச்சி - கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 18:14 pm
  • அ+ அ-

கெட்டுப்போன ஆட்டிறைச்சி விவகாரத்தில் ராஜஸ்தான் சென்ற ரயில்வே போலீஸார் அங்கு விசாரணை நடத்துகின்றனர். ஏஜெண்டுக்கு சம்மனும் அனுப்பியுள்ளனர்.

கடந்த 17- ம் தேதி ராஜஸ்தானிலிருந்து எழும்பூர் வரும் ரயிலில் 2190 கிலோ தரமற்ற இறைச்சி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கைப்பற்றப்பட்ட இறைச்சி உணவுப்பாதுகாப்பு சட்டப்படி முறையாக கொண்டுவராமல் நான்குநாட்கள் பயணத்தில் கெட்டுப்போயிருந்ததைக் கண்டனர். இறைச்சி மீதும் சந்தேகம் ஏற்பட்டதால் சில துண்டுகளை ஆய்வுக்கு அனுப்பிவிட்டு கெட்டுபோன இறைச்சியை அழித்தனர்.  

கைப்பற்றப்பட்டது ஆட்டிறைச்சிதான் என ஆய்வு முடிவு வந்தது, ஆனாலும் பார்சலை மீன் என புக் செய்த புக்கிங் ஏஜெண்ட் கணேசன் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் மீது, ரயில்வே சட்டம் 1989 பிரிவு 163, 145 பி ஆகிய இரு பிரிவுகளின் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

கணேசன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ரயில்வே சட்டத்தை மீறி பார்சல் பதிவு செய்பவர்கள், பார்சல் அனுப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த ரயில்வே போலீஸார் ஜோத்பூரிலிருந்து மீன் எனக் குறிப்பிட்டு 2,190 கிலோ இறைச்சியை அனுப்பியது யார்?  அதற்கு பெறுநர் விலாசம் ஏன் இல்லை, என்பது குறித்து விசாரணை நடத்த முடிவெடுத்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை ஜோத்பூருக்குச் சென்றது. ஜோத்பூரில் இருந்து அனுப்பும்போது மீன் பார்சல்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதனால் அனுப்பிய நபரின் முகவரி ஜோத்பூரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் இறைச்சி பார்சல்களை மீன் பார்சல்கள் என்று அனுப்பிய நபரைத் தேடி இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் ஜோத்பூருக்குச் சென்றனர்.

ஜோத்பூர் சென்று சேர்ந்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார், அங்கிருந்து இறைச்சியை அனுப்பிய உஸ்மான் என்பவருக்கு எழும்பூர் ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அளித்தனர். மேலும் ஜோத்பூரில் இறைச்சி பார்சலை பதிவு செய்த ஊழியர்கள் அதனை திறந்து பார்த்து சோதித்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இறைச்சியை அனுப்பிய நபர் யார், இறைச்சி வெட்டுக்கூடம் எங்குள்ளது, எப்படி பார்சல் அனுப்புகிறார்கள், சென்னையில் யார் யாருக்கு அனுப்பப்படுகிறது, அங்குள்ள ஏஜெண்டுகளுக்கும் இங்குள்ள ஏஜண்டுகளுக்கு என்ன தொடர்பு என்பது குறித்தும்  விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்த போலீசார் அந்த ஆவணங்களை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close