[X] Close

திருவாரூர்; பிப்ரவரி 7க்குள் தேர்தல்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி


tvr-election

திருவாரூர் ரயில்நிலையம்

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 13:30 pm
  • அ+ அ-

வருகிற பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தலை நடத்தவேண்டும் என மதுரைய கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில், எப்போது தேர்தல் நடத்துவீர்கள் என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியிருந்தது.

திருவாரூர் தொகுதியில் நின்று வென்ற திமுக தலைவர் கருணாநிதி காலாமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இந்தத் தொகுதி  காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.

இந்த நிலையில், பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுவில் குறிப்பிட்டார்.

மேலும் திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்கு தேர்தல் நடத்துவது குறித்து தேதி அறிவிக்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதையும் சத்யப்ரதா சாஹூ மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close