[X] Close

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்; மதிமுகவுக்கு திமுக ஆதரவு என ஸ்டாலின் கடிதம்


7-per-vaiko-stalin

மு.க.ஸ்டாலின் - வைகோ

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 12:28 pm
  • அ+ அ-

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் டிசம்பர் 3ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக அறிவித்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 3ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை மதிமுக, திராவிடர்கழகம் உள்ளிட்டவை இணைந்து நடத்துகின்றன.

இதுகுறித்து அனைத்துக் கட்சிகளுக்கும் மதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா இல்லையா என்பதை ஸ்டாலின் உறுதி செய்யவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிமுக அமைச்சர்களின் கஜா புயல் குறித்த செயல்பாடுகளைப் பாராட்டியிருந்தார் வைகோ. இதனிடையே மதிமுக எங்களுடன் தோழமைக் கட்சிகளாக, ஒத்த கருத்து கொண்ட கட்சியாக இருக்கிறது. தேர்தல் வரும் போதுதான் எங்களுடன் கூட்டணி கொண்டிருக்கும் கட்சிகள் குறித்து சொல்லமுடியும் என்றும் சிலர் வருவார்கள் சிலர் செல்வார்கள் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தது, திமுக மதிமுக இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மதிமுக தொண்டர்கள் துரைமுருகனின் பேச்சால், மிகுந்த மன வருத்தத்தில் இருக்கின்றனர் என்று வைகோ தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், 7 பேர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் டிசம்பர் 3ம் தேதி நடத்தப்படும் என மதிமுக அறிவித்தது. மேலும் அனைத்துக்கட்சிகளுக்கும் இதுதொடர்பாக கடிதமும் அனுப்பியிருந்தது.

திமுக, மதிமுக கூட்டணியா இல்லையா எனும் சூழ்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் 7 பேர் விடுதலை குறித்த விஷயத்தில், திமுகவின் நிலைப்பாடும் இதுவே. எனவே மதிமுகவும் திராவிடர் கழகமும் நடத்துகிற ஆளுநர் முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் திமுக, மதிமுக விரிசல் என்பது மாதிரியான பேச்சுகளுக்கு வைகோவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு எனும் ஸ்டாலினின் கடிதம், முற்றுப்புள்ளி வைத்ததாகவே இருதரப்பு தொண்டர்களும் பேசிக்கொள்கின்றனர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close