[X] Close

மணக்கோலத்தில் புயல் நிவாரணம் வழங்கிய புதுமண தம்பதி


newly-wed-couple-donates-for-gaja

கரூர் ஐயப்ப சேவா சங்கத்தின் கஜா புயல் நிவாரண மையத்துக்கு நேற்று மணக்கோலத்தில் சென்று புயல் நிவாரணப் பொருட்களை வழங்கிய புதுமணத் தம்பதி செந்தில்குமார், இந்துமதி.

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 26 Nov, 2018 12:26 pm
  • அ+ அ-

கரூர் ஐயப்ப சேவா சங்கத்தின் கஜா புயல் நிவாரண மையத்துக்கு நேற்று மணக்கோலத்தில் சென்று புயல் நிவாரணப் பொருட்களை புதுமண தம்பதி வழங்கினர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(31). கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி(25). இவர்கள் இருவருக்கும் கரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் செந்தில்குமார், இந்துமதி இருவரும் மணக்கோலத்தில், கரூர் ஐயப்ப சேவா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கஜா புயல் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் மையத்துக்குச் சென்றனர். அங்கு பெட்ஷீட்கள், துண்டுகள், ஒரு வாரத்துக்கு பயன்படுத்தக்கூடிய 800 பதப்படுத்தப்பட்ட பூரிகள் என ரூ.3,000 மதிப்புள்ள பொருட்களை புயல் நிவாரணமாக மணமக்கள் வழங்கினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close