[X] Close

‘புயல் நிவாரண நிதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்’


thambidurai-about-parliament-activities

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 12:24 pm
  • அ+ அ-

புயல் நிவாரண நிதிக்காக அதிமுக எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மூர்த்திபாளையத்தில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

சுனாமியின்போது உயிர்ச் சேதம் அதிகமாக இருந்தது. ஆனால், கஜா புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும், சேதத்தின் மதிப்பு மிக அதிகம். எனவே, கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.

இந்த பாதிப்பை பார்வையிட்ட மத்தியக் குழுவினர், தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக பாதிப்பு உள்ளதை தெரிந்துகொண்டனர். மத்தியக்குழு அறிக்கை தாக்கல் செய்ததும், பிரதமர் நிவாரண நிதியை அறிவிப்பார். வரும் டிச.11-ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது. இதில், அதிமுக எம்.பிக்கள் அனைவரும் புயல் நிவாரண நிதிக்காக குரல் கொடுப் போம். காவிரி விவகாரத்தில் வெற்றி பெற்றதை போல, இதிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், புஞ்சை தோட்டக் குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close