[X] Close

புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்யும் மத்திய குழுவினரால் எந்த பயனும் கிடையாது: வைகோ கருத்து


vaiko-about-central-government

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 12:23 pm
  • அ+ அ-

புயல் பாதித்த பகுதிகளில் தற்போது ஆய்வு மேற்கொண்டி ருக்கும் மத்திய குழுவால் எதுவும் கிடைக்கப் போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று வந்த அவர், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. தமிழக முதல்வருக்கு விவசாயத்தைப் பற்றி தெரியாது. விவசாயத்தில் அவர் ஜீரோ. அதனால்தான் அவர் இதுபோன்ற நிவாரணத்தை அறிவித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் உயிரைக் கொடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் துறை ஊழியர் களுக்கும் தலைவணங்குகிறேன். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அதற் கான அறிக்கையை நாங்கள் தயாரித்து வருகிறோம்.

தற்போது ஆய்வு மேற்கொண்டி ருக்கும் மத்திய குழுவால் எதுவும் கிடைக்கப் போவதில்லை. தமிழகத்துக்கு புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.25,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால், பிரதமர் மோடியை தமிழகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close