[X] Close

திமுக கூட்டணில இருக்கத்தான் விருப்பம் - திருமாவளவன்


tirumavalavan

மு.க.ஸ்டாலின் - திருமாவளவன்

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 11:29 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமியக் கட்சிகள் அனைத்துமே திமுகவுடன் கடந்த இரண்டு வருட காலமாகவே தோழமையுடன் இருக்கின்றன. அவை அப்படியே திமுகவுடன் கூட்டணிக் கட்சிகளாக இருக்கவேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மதிமுக உங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் இப்போது அவர் அதிமுக அரசையும் அமைச்சர்களையும் புகழ்ந்து பேசியிருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் போது சிறப்பாக செயல்பட்டனர் என்று சொல்லியிருக்கிறார்.

மதிமுக திமுகவுடன் கூட்டணியில் இருக்கிற கட்சிதானே. அவர் இப்படி அதிமுகவைப் புகழ்ந்திருக்கிறாரே என்று கேட்கப்பட்டது. இதற்கு துரைமுருகன், அவர்கள் தோழமைக் கட்சிகள்தானே ஒழிய கூட்டணிக் கட்சிகள் இல்லை. தேர்தல் வரும்போதுதான் கூட்டணிக்கட்சிகள் யார் யார் என்பது குறித்து பேசப்படும். இப்போது இவர்கள் ஒத்த கருத்துள்ள தோழமைக் கட்சியினர் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கேட்கப்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகன் இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். மதிமுக, திமுக கூட்டணியில் இருக்கிறதா இல்லையா, துரைமுருகன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பதையெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின்தான் விளக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் இதுகுறித்துக் கேட்கப்பட்டது.

அதற்கு திருமாவளவன் தெரிவித்ததாவது:

காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமியக் கட்சிகள் அனைத்துமே திமுகவுடன் கடந்த இரண்டு வருட காலமாகவே தோழமையுடன் இருக்கின்றன.

இந்தத் தோழமை உணர்வுடன் உள்ள கட்சிகள் அனைத்துமே அப்படியே திமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டும், திமுகவுடன் கூட்டணியில் இருக்கவேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார் .

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close