[X] Close

தமிழகத்தில் பனிப்பொழிவு; மழை இல்லாமல் போகுமா? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் பதில்


rain

கோப்புப் படம்

  • நெல்லை ஜெனா
  • Posted: 26 Nov, 2018 10:56 am
  • அ+ அ-

சென்னை

தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது பனி்ப்பொழிவு காணப்பட்டாலும் அடுத்த சில நாட்களில் நிலைமை மாறி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது

ஐப்பசி முடிந்து கார்த்திகை தீபம் கடந்து விட்டநிலையில் பனிபொழிகிறதே. இனிமேல் மழை பெய்யாதோ என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. விவசாயிகள் இதுபோல அச்சப்பட வேண்டாம். அதுபோல நடக்க எந்த வாய்ப்பும் இல்லை.

கடல் வெப்பம் மழைக்கு சாதகமாக உள்ளது. வியட்நாம் அருகே உள்ள வலிமையான காற்றழுத்த தாழ்வு நிலை, நம்பகுதிக்கு காற்றை கொண்டு விடாமல் தடுக்கிறது. வானிலை பாணியில் கூற வேண்டும் என்றால் தாழ்வு நிலை ஏற்படுவதை விட, செட்டிங் சரியாக இல்லை.

மாலத்தீவு அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வடகிழக்கு காற்றை நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1-ம் தேதிகளில் ஈர்க்கும். அப்போது பரவலமாக மழை பெய்யும்.

அதுபோலவே இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. இதனால், டிசம்பர் 5 முதல் 9-ம் தேதி வரையிலும், டிசம்பர் 12 முதல் டிசம்பர் 16 வரையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்பின் ஜனவரியிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி மழைக்கு அதிமான வாய்ப்புள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை சீசனை பொறுத்தவரை டிசம்பர் 5-ம் தேதிக்கு பிறகு தீவிரமடையும், டிசம்பர் 25-ம் தேதிக்கு பிறகு மிக தீவிரமடையும். எனவே ஒரு சில நாட்கள் தற்போது பனிப்பொழிவு காணப்பட்டாலும், விரைவில் மழை வருவதற்கு சாதகமான சூழல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close