[X] Close

வைகோ புகழ்கிறார்; அமைச்சர்களுக்கு எச்சரிக்கை - தமிழிசை ட்வீட்


vaiko-tamilisai

தமிழிசை - வைகோ

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 10:47 am
  • அ+ அ-

வைகோ புகழ்ந்துகொண்டிருக்கிறார். இது நல்லதல்ல என்று தமிழக அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் அமைச்சர்கள் விஜயபாஸ்கரும் உதயகுமாரும் சிறப்பாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமீபத்தில் தெரிவித்தார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருக்க தகுதியே இல்லாதவர் என்றும் குறிப்பிட்டார்.

இதையொட்டி பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தன் டிவிட்டர் பக்கத்தில், ‘வைகோவின் புகழாரத்தைக் கண்டு மயங்கிவிடாதீர்கள். அமைச்சர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். துரைமுருகன் பதிலளித்த விஷயத்தில் வைகோ காயப்பட்டுள்ளார். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close