[X] Close

7 மாவட்டங்களில் ஸ்கேன் எடுக்க கட்டணமில்லை


scan-tn

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 10:36 am
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 டெல்டா மாவட்டங்களில் ஸ்கேன் எடுப்பதற்கு எந்தக் கட்டணமும் வாங்கக் கூடாது என அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இப்போது 7 மாவட்டங்களுக்கு ஸ்கேன் கட்டணமில்லை என அறிவித்துள்ளது அரசு.

அரசு மருத்துவமனைகளில் சாதாரண ஸ்கேன் எடுப்பதற்குக் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால் சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கஜா  புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள டெல்டா மக்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று, ஸ்கேன்களுக்கு பணம் கேட்பதாலும் பணம் இல்லாததாலும் கைபிசைந்தபடி சிகிச்சை எடுத்துக்கொள்ளாமலேயே திரும்பி வந்துவிடுகின்றனர்.

இந்த நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுப்பதற்கு இந்த மக்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டது. தற்போது இந்த மாவட்டங்களை அடுத்து, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் முதலான மாவட்டங்களும் இணைத்து 7 மாவட்டங்களுக்கும் ஸ்கேன் எடுக்க கட்டணம் இல்லை என அறிவித்துள்ளது அரசு.

வரும் டிசம்பர் 15ம் தேதி வரை இந்த ஏழு மாவட்டங்களிலும் ஸ்கேன் எடுப்பதற்கு கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close