[X] Close

கூட்டணி குறித்து துரைமுருகன் சொன்னதை ஸ்டாலின்தான் விளக்கவேண்டும்- வைகோ கேள்வி


vaiko-stalin

மு.க.ஸ்டாலின் - வைகோ

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 10:20 am
  • அ+ அ-

கூட்டணி குறித்து துரைமுருகன் சொன்னதற்கான அர்த்தத்தை திமுக தலைவர் ஸ்டாலின்தான் விளக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து தெரிவித்ததாவது:

தமிழக அரசு புயல் நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை. டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். எனவே நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

கூட்டணி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இப்போது கூட்டணியில் இல்லை. நண்பர்களாகவும் ஒத்த சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வளவுதான் என்பது போல் சொல்லியிருக்கிறார்.

கூட்டணி குறித்து துரைமுருகன் சொன்னதற்கு அர்த்தம் என்ன? மதிமுக குறித்து திமுகவின் நிலைப்பாடு என்ன? திமுக தலைவர் ஸ்டாலின்தான் விளக்கவேண்டும்.

இவ்வாறு வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close