[X] Close

மத்திய அரசு மெத்தனம் - திருமாவளவன் தாக்கு


gaja-tiruma

திருமாவளவன்

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 11:01 am
  • அ+ அ-

கஜா புயல் நிவாரணத்திலும் கூட மத்திய அரசு மெத்தனமாகவே இருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் மதுரையில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்திலும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உதவுவதிலும் வழக்கம்போலவே மெத்தனம் காட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு நின்றுகொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து உணர்ந்து மத்திய அரசு, வேகம் காட்டவேண்டும்.

தென்னை விவசாயிகளுக்கு வழங்குவதாகச் சொல்லியிருக்கிற நிவாரணத் தொகை போதாது. தென்னைக்கு உண்டான சரியான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.   

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close