[X] Close

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு  புயலால் தீவுபோல முடங்கிய முத்தன்பள்ளம்: உணவு, உடை ஏதுமின்றி பொதுமக்கள் கடும் அவதி


gaja-cyclone-at-muthanpalayam

புதுக்கோட்டை மாவட்டம் முத்தன்பள்ளம் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த குடிசை வீடுகள்

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 10:53 am
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புயலால் சாலை அடித்து செல்லப்பட்டதால் தனித் தீவுபோல முத்தன்பள்ளம் கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் யாரும் செல்லாத தால் மக்கள் அன்றாடத் தேவை களுக்கே அவதிப்படும் நிலை உள்ளது.

கந்தர்வக்கோட்டை வட்டம் கல்லாக்கோட்டை ஊராட்சி முத்தன்பள்ளம் கிராமத்தில் 36 குடிசைகளில் சுமார் 150 பேர் வசிக்கின்றனர். அத்தனை குடும்பத்தினரும் தினக்கூலி தொழிலாளர்கள்.

பிரதான சாலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு தார் சாலை வசதி இல்லை. அரசின் பசுமைவீடுகள் கூட கட்டிக் கொடுக்கப்படாததால் இரு ஓட்டு வீடுகளைத் தவிர அனைத்து வீடு களும் குடிசைகளாகவே உள்ளன.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று பயில்கின்றனர். கஜா புயலால் அனைத்து வீடுகளும் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பலத்த சேதமடைந்துள்ளன. அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சாலை துண்டிக் கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள இரு ஓட்டு வீடுகளிலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான மின் அறையிலும் தங்கியுள்ளனர். புயலுக்குப் பிறகும்கூட அவர்களது வாழ்வாதாரமான ஆடு, மாடுகளை விட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே உள்ளனர்.

3 கிலோ மீட்டர் சேற்றில் நடந்து செல்ல முடியாமல் இதுவரை எந்த அலுவலர்களும் அங்கு செல்லவில்லை. நிவாரண பொருட் களும் வழங்கப்படவில்லை.

உணவு, உடையின்றி இப்பகுதியினர் கடும் அவதி யடைந்து வருகின்றனர். கிராமமே இருளில் மூழ்கி உள்ளது. மோட்டார் சைக்கிளில்கூட செல்ல முடியாததால் உடல் நிலை சரி யில்லாதவர்களை கட்டிலில் வைத்து மருத்துவமனைக்கு சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கிராமத்துக்கு தேர்த லின்போது, வாக்குக்காக செல்வதோடு, அதன்பிறகு எந்த மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை என்பதுதான் அப்பகுதியினரின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே, அதிகாரிகள் உடனே அங்கு வந்து தங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close