[X] Close

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகளில் தமிழக அமைச்சர்கள்


ministers-in-thiruvarur-district

திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள விளக்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தயாரிக்கப்படுவதை நேற்று பார்வையிடுகிறார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 11:25 am
  • அ+ அ-

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, செல்லூர் ராஜூ ஆகியோர் முகாமிட்டு, நிவாரணப் பணிகள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று மன்னார்குடி பகுதியில் நடைபெற்ற நிவாரணப் பணிகளை கண்காணித்தார். மன்னார்குடி பிருந்தாவன் நகர் பகுதிக்கு டேங்கர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட குடிநீரை, அப்பகுதி மக்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். மேலும் பால், உணவுப் பொருட்களை சிறுவர், சிறுமியர், பெண்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினார். தொடர்ந்து, மன்னார்குடி பாமணி கிராமத்தில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உதவிப் பொருட்களை வழங்கினார்.

இதேபோல, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று கூத்தாநல்லூர் பகுதிகளில் மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி மற்றும் சேதமடைந்த குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணிகளை ஆய்வு செய்தார். மன்னார்குடி கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள தென்கோவனூர், வட கோவனூர் ஆகிய பகுதிகளுக்கு ஜெனரேட்டர் வசதிகளை ஏற்படுத்தி குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தினார். தொடர்ந்து, அப்பகுதியில் மின் கம்பங்கள் பராமரிப்பு மற்றும் சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி, அவர்களது பணிக்கு நன்றி தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திருத்துறைப்பூண்டி பகுதியில் பல்வேறு இடங்களில் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, விரைந்து பணிகளை முடிக்கும்படி அறுவுறுத்தினார்.

தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், திருவாரூருக்கு நேற்று வந்த ஆளுநருடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பின்னர், மாலையில் முத்துப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் நிவாரண பணிகளை பார்வையிட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close