[X] Close

திருவாரூரில் 5 தாலுகா பள்ளிகளுக்கு லீவு


gaja-tvr

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 21:15 pm
  • அ+ அ-

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் நடந்து வருவதால், நாளைய தினம் வெள்ளிக்கிழமை 23ம் தேதி திருவாரூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் கடந்த 15ம் தேதி நள்ளிரவு தன் கோரத்தாண்டவத்தை ஆடியது. இதில் நாகை, வேதாரண்யம், அதிராம்பட்டினம், பேராவூரணி, பட்டுகோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, புதுக்கோட்டை முதலான பல ஊர்கள் உருக்குலைந்தன. மரங்கள் வேரோடு விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. தென்னையும் வாழையும் சாய்ந்து மக்கள் நிலைகுலைந்து போனார்கள்.

படகுகள் தூக்கிவீசப்பட்டன. வேதாரண்யம் கோடியக்கரையில் உள்ள மான்கள் செத்து மடிந்தன. மாவட்டங்கள் முழுவதும் இருளில் மூழ்கின. சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திருவாரூர் 5 தாலுகாவில், அதாவது மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், குடவாசல், நன்னிலம், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய பகுதிகளில் முகாம் இருந்தால் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close