[X] Close

நாகை வருவாய் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


nagai-gaja

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 20:31 pm
  • அ+ அ-

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் நடந்து வருவதால், நாளைய தினம் வெள்ளிக்கிழமை 23ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் கடந்த 15ம் தேதி நள்ளிரவு தன் கோரத்தாண்டவத்தை ஆடியது. இதில் நாகை, வேதாரண்யம், அதிராம்பட்டினம், பேராவூரணி, பட்டுகோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, புதுக்கோட்டை முதலான பல ஊர்கள் உருக்குலைந்தன. மரங்கள் வேரோடு விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. தென்னையும் வாழையும் சாய்ந்து மக்கள் நிலைகுலைந்து போனார்கள்.

படகுகள் தூக்கிவீசப்பட்டன. வேதாரண்யம் கோடியக்கரையில் உள்ள மான்கள் செத்து மடிந்தன. மாவட்டங்கள் முழுவதும் இருளில் மூழ்கின. சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நாகை வருவாய் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் நாளையும் (23ம் தேதி வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close