[X] Close

அதிமுக அதிக நிதி வழங்கினால் வரவேற்போம் – துரைமுருகன்


duraimurugan

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 20:04 pm
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திமுகவை விட அதிமுக அதிக நிதி வழங்கினால் வரவேற்போம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்ததாவது:

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் டெல்டா மாவட்ட மக்களுக்கு திமுக வழங்கியிருக்கும் நிதியை விட அதிமுகவினர் அதிக நிதி வழங்கினால், அதை வரவேற்போம். புயல் பணியாக இருந்தாலும் நிதி வழங்கும் பணியாக இருந்தாலும் கட்சி வித்தியாசம் இல்லாமல் கூடுதலாகச் செய்வது நல்லதுதானே.

மத்திய அரசிடம் நிதி கேட்பதில் தயங்கக்கூடாது. வணங்காமுடி மன்னனைப் போல் மத்திய அரசிடம் நிதியைக் கேட்கவேண்டும்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close