[X] Close

கேரள அரசைக் கண்டித்து குமரியில் பாஜகவினர் நாளை கடையடைப்பு – தமிழிசை அறிவிப்பு


bjp-kumari-sabarimalai

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 18:02 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கேரள அரசைக் கண்டித்து பாஜக சார்பில் குமரியில் நாளைய தினம் (23ம் தேதி) கடையடைப்பு நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்ததாவது:

 மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலைக்குச் சென்ற போது, அவரை கேரள அரசு நடத்திய விதம் மரியாதைக் குறைவானது. மதநம்பிக்கை இல்லாதவர்களை சபரிமலையில் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார் பினராயி விஜயன். இதனால் சபரிமலையில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் சரணகோஷம் கூட ஒலிப்பதில்லை.

புனிதத்தை மதிக்கவேண்டும். ஒரு ஆலயத்தின் நடைமுறைப்படி, வழக்கப்படி மதித்து நடந்துகொள்ளவேண்டும். அங்கே வரும் உண்மையான பக்தர்களை கொடுமைப்படுத்துவது போல் தெரிகிறது. மத்திய இணை அமைச்சரிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதைக் கண்டித்து நாளைய தினம் (23ம் தேதி) குமரியில் கடையடைப்புப் போராட்டத்தை பாஜக நடத்த உள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விமானப் படை, கப்பல் படை என மத்திய அரசின் அதிகாரிகளும் பணியாளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உள்துறை அமைச்சகம், ராணுவ அமைச்சகம் இதுகுறித்து பல தகவல்களை வழங்கியிருக்கிறது.

ஊடகங்களே செல்லாத டெல்டா மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு நாங்கள் சென்று மருத்துவ முகாம்களை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன் சம்பவத்தை அடுத்து குமரிக்கு வரும் கேரளப் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. நேற்று முதல் இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இன்று காலையும் கூட இதே நிலை நீடித்தது. மதியத்துக்கு மேல் சகஜ நிலைக்கு வந்ததால் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close