[X] Close

சென்னையில் எத்தனை நாள் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்


schools-and-colleges-to-stay-shut-today

  • நெல்லை ஜெனா
  • Posted: 22 Nov, 2018 17:54 pm
  • அ+ அ-

தெற்கு கர்நாடக பகுதியில் நிலைகொண்டுள்ள வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மாலை வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பிறகு உள்மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று காலை நிலவரப்படி கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டம் வடக்குப்பகுதியையொட்டி கர்நாடகாவின் மைசூர் மாண்டியாவை நோக்கி நகர்ந்தது. தற்போது தெற்கு கர்நாடகாவில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது.

இது நாளை மாலை அரபிக்கடலுக்கு சென்று அங்கு ஏற்கெனவே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இணைந்து வலுப்பெறும். இதனால் நாளை மாலை வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தெற்கு கர்நாடக, தெற்கு ஆந்திர பகுதிகளிலும் பரவலாக மழை பொழியும்.

மேலடுக்கு சுழற்சி நாளை மாலை அரபிக்கடலுக்கு சென்ற பிறகு சென்னையில் மழை குறையும். அதன் பிறகு கிழக்கு காற்றை ஈர்ப்பதால் உள் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும். 24-ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும்.

அதன்பிறகு 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. 29-ம் தேதி அளவில் மாலத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அதன் நகர்வை பொறுத்து மழை இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close