[X] Close

12 மாவட்டங்களில் அடுத்து கன மழை; எந்தெந்த மாவட்டங்கள்?


rain-12-district

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 15:21 pm
  • அ+ அ-

12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், கனமழையும் அதிக கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை  ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் முதலாகவே இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது, அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு, கரூர், நீலகிரி முதலான மாவட்டங்களில் கனமான மழையும் மிக கனமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

சென்னையைப் பொருத்தவரை, விட்டு விட்டு மழை பெய்யும். மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close