[X] Close

பாஜக மதவாத கட்சியென்றால் காங்கிரஸ்?!- தமிழிசை காட்டம்


tamilisai-slams-congress

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Nov, 2018 13:34 pm
  • அ+ அ-

பாஜக மதவாத கட்சியென்றால் வாங்கு வங்கிக்காக பேரம் பேசும் காங்கிரஸ் கட்சி எத்தகையது என வினவியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குவங்கிக்காக முஸ்லிம் தலைவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பேரம் பேசுவதாக வெளியான வீடியோவை சுட்டிக்காட்டியுள்ள தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பாஜக மதவாத கட்சி என்று தினமும் கூறும் ஸ்டாலின் திருமா பசி கம்யூ. பார்வைக்கு...சிறுபாண்மை வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சி?" என வினவியிருக்கிறார்.

முன்னதாக சமூகவலைதளங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முஸ்லிம் தலைவர்களுடன் பேசும் வீடியோ ஒன்று வெளியானது.
அதில், "90 சதவீத முஸ்லிம்களின் வாக்குகள் காங்கிரசுக்கே கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறும் அவ்வாறு அவர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் பாஜக வெற்றி பெற்றுவிடும், காங்கிரஸ் கடுமையான இழப்பை சந்திக்க நேரும்" எனக் கூறுவது போல் காட்சிகள் இருந்தன.

வரும் 28ம்தேதி மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த வீடியோ காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்தான், தமிழிசை காங்கிரஸை இப்படி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close