[X] Close

பிரச்சினைகளை திசைதிருப்புகிறார் அமித் ஷா!- ட்விட்டரில் பினராயி விஜயன் பதிலடி


pinarayi-vijayan-counters-amit-shah-s-gulag-jab

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Nov, 2018 11:22 am
  • அ+ அ-

சபரிமலை விவகாரம் குறித்து அமித் ஷா பதிவு செய்த ட்வீட்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். சங்க பரிவாரங்கள் சொல்வதைக் கேட்டு பிரச்சினைகளை அமித் ஷா திசை திருப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக அமித் ஷா தனது ட்விட்டரில், "சபரிமலை வரும் பக்தர்கள் இரவு தங்குவதற்கு இடமெல்லாம் விரட்டப்பட்டு குப்பைத் தொட்டிகள் அருகேயும் பன்றிகள் திரியும் இடங்கள் அருகேயும் தங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது உண்மையானால் ஐயப்ப பக்தர்களை சோயித் யூனியன் தனது குலாக் முகாம்வாசிகளை நடத்தியதுபோல் நடத்தக்கூடாது என்பதை பினராயி விஜயன் உணர வேண்டும். கேரளாவின் எல்டிஎஃப் ஆட்சி பக்தர்களின் நம்பிக்கையை இத்தகைய தண்டனைகளால் ஒடுக்குவதை அனுமதிக்கமாட்டோம்" எனக் கூறியிருந்தார்.
குலாக் முகாம் என்பது சோவித் யூனியனால் தனது தொழில்துறையை வேகமாக வளர்த்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முகாம். இதில் மக்கள் கட்டாய தொழிலாளர்களாக வதைக்கப்பட்டதாக இன்றளவும் புகார் நிலவுகிறது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இது தொடர்பாக பினராயி விஜயன் பதிவு செய்த ட்வீட்களில், "சபரிமலை பிரச்சினையில் அமித் ஷா பதிவு செய்துள்ள ட்வீட்கள் ஆதாரமற்றவை. திசைதிருப்பும் தொணியில் உள்ளன. சபரிமலை புனிதயாத்திரை சமுகமாக சென்று கொண்டிருக்கிறது. பக்தர்கள் அரசின் முன்னேற்படுகளுக்கு திருப்தி தெரிவித்திருக்கின்றனர். அரசின் ஏற்பாடுகள் மீது குறை சொல்பவர்கள் எல்லோருமே சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் நோக்கம் பிரச்சினை ஏற்பட வேண்டும் என்பதுதான்.

அவர்கள் முன்னெடுத்த பிரச்சாரத்தால் அமித் ஷா தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார். மாண்புமிகு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழி அரசுக்கு இல்லை எனக் கூறியிருக்கிறார். அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவே தகுந்த பதில்.

மேலும், மனித உரிமை ஆணையமும் இந்த ஆண்டு சபரிமலை புனித யாத்திரையில் எவ்வித பெரிய பிரச்சினையும் புலப்படவில்லை என்றே கூறியிருக்கிறது" என பதில் தெரிவித்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close