[X] Close

அமைச்சர்களை மக்கள் முற்றுகை; மறியலால் பதற்றம்


people-protest-against-poor-relief-efforts

முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாட்டை அடுத்த தெலுங்கன்குடிகாட்டில் நேற்று அமைச்சர்கள் உள்ளிட்டோரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 11:30 am
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் 4 நாட்களாக மின்சாரம் இல்லாதது, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அதிகாரிகள் புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு செய்யாமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களால் விரக்தியடைந்த மக்கள் பல்வேறு இடங்களில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான பட்டுக்கோட்டை, அதிராம் பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் ஒரத்தநாடு, தஞ்சாவூர் பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மை யான வீடுகள் தரைமட்டமாயின. தென்னை, தேக்கு, மரங்கள் விழுந்து வீடுகளின் ஓடுகள் நொறுங்கியும், சுவர்கள் இடிந்தும் சேதமடைந்தன. வீட்டை விட்டு வெளியே வர இயலாத அளவுக்கு வீட்டின் முன்பும், உட்பிரிவு சாலைகளிலும், மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன.

25 ஆண்டுகள் பின்னோக்கி..

புயல் வீசிய அந்த நேரத்தில், பெண் களும், குழந்தைகளும் மரணத்தின் எல்லைக்கே சென்று வந்ததாகவும், உயிர் பிழைப்போம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை எனவும், புயல் மீட்பு, நிவாரணப் பணிகள் ஏதும் எங்கள் பகுதி யில் நடைபெறவில்லை என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள், 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கிய நிலைக்கு சென்றுவிட்டதாகவும், உடைமை கள், வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விட்டதால் இயல்பு நிலைக்குத் திரும்ப பல பத்தாண்டுகள் ஆகும் என கண்ணீர் மல்க கதறியழுகின்றனர்.

புயல் தாக்கிய 4-ம் நாளான நேற்றும் பெரும்பாலான மக்கள் குடிநீர், உணவு கோரியும், புயல் நிவாரணம், சீரமைப்புப் பணிகளில் அரசு மெத்தனம் காட்டுவதாக கூறியும் ஆங்காங்கே சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மீட்பு, நிவாரணப் பணிகளை மேற் பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சர் கள் செங்கோட்டையன், உடுமலை ராதா கிருஷ்ணன், தங்கமணி, வேலுமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வைத்தி லிங்கம் எம்பி உள்ளிட்டோர் நேற்று ஒரத்த நாடு உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்களில் சென்று பார்வையிட்டனர்.

அவர்களை, ஆங்காங்கே பொதுமக் கள் முற்றுகையிட்டு தங்கள் பகுதி கடும் பாதிப்படைந்துள்ளதாகவும், இதுவரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என வும் முறையிட்டதோடு, கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். வைத்திலிங்கம் எம்பியின் சொந்த ஊரான ஒரத்தநாட்டை அடுத்த தெலுங்கன்குடிகாட்டில் பொதுமக்கள், அமைச்சர்களை முற்றுகையிட்டனர்.

இதனால், மிகுந்த நெருக்கடிக்கு உள் ளான வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர் கள் பெரும் போராட்டத்துக்குப் பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளும் ஒருபுறத்தில் அரசு தரப்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மின் சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் வசதி இன்றி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியதால் சாலை மறியல் போராட்டங்கள் நேற்று அதிகம் நடைபெற்றன.

திருத்துறைப்பூண்டியில் அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சென்ற கார்களை மறித்து பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். உரிய நிவார ணம் வழங்கப்படும் என அமைச்சர்கள் சமாதானப்படுத்தியும் பொதுமக்கள் கேட்க வில்லை. ஒரு கட்டத்தில் போலீஸார் பொது மக்களை சமாதானப்படுத்தி அமைச்சர் களை அழைத்து சென்றனர்.

திருவாரூர் அருகேயுள்ள உத்திரங்குடி என்ற இடத்தில் ராதாநஞ்சை, அக்கரை கோமல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி கிராமங்களை அதிகாரிகள் யாரும் பார்க்க வரவில்லை எனக் கூறி சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற திருவாரூர் மாவட்ட சிறப்பு அதி காரி அமுதாவின் வாகனத்தை மறித்தனர். தொடர்ந்து அமுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்கள் பகுதியை பார்வையிட வேண்டும் என கூறினர். அதனை தொடர்ந்து 2 கிராமங்களையும் பார்வையிட்ட பின்னரே பொதுமக்கள் சமாதானமடைந்து சாலை மறியலை கைவிட்டனர்.

இதேபோல மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை உள்ளிக்கோட்டையி லும் சாலை மறியல் நடந்தது. மன்னார் குடியை அடுத்த கருவாக்குறிச்சியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது கிராமத்தில் பாதிப்புகளை கணக்கெடுப்பு செய்ய வில்லை எனக் கூறி மன்னார்குடி காளவாய் கரை வந்து தஞ்சை சாலையில் மறிய லில் ஈடுபட்டனர். கிராம மக்களுக்கு ஆதர வாக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா வும் மறியலில் ஈடுபட்டார். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உரிய கணக்கெ டுப்பு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இதேபோல திருவாரூரை அடுத்த தண்ட லச்சேரி, அடியக்கமங்கலம், சேந்தமங்க லம், முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப் பூண்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங் களில் நேற்று மறியல் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் நேற்று அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.காமராஜ் ஆகியோரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூரில் மறியலில் ஈடுபட்ட மக்களை புதுக் கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறு முகம் மற்றும் போலீஸார் சமாதானம் செய்தனர். இதேபோன்று, அறந்தாங்கி அருகே பெருங்காட்டிலும் குடிநீர், மின் சாரம் கோரி சாலை மறியல் நடந்தது. அறந்தாங்கி போலீஸாரின் சமாதானத்தை ஏற்று மக்கள் மறியலை கைவிட்டனர்.

மணப்பாறையில் 10 இடங்களில் மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி உள்ளிட்ட பகுதி கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கோவில்பட்டி சாலை, மணப்பட்டி பிரிவு சாலை பகுதி மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல், மணப்பாறை 13, 14, 15 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த மக்கள் மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் பால் கூட்டுறவு சங்கம் அருகே மறியல் நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்த வந்த நகராட்சிப் பொறியாளர் மனோகரனை மக்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி - திண்டுக்கல் தேசிய வெள்ளக்கல் பகுதியில் சொக்கலிங்கபுரம் பகுதி மக்களும், 23-வது வார்டு சிதம்பரத்தான்பட்டியில் ஜேஜே நகர் மக்களும், விராலிமலை - கோவில்பட்டி பிரிவு சாலையில் காமராஜர் சிலை அருகே காட்டுப்பட்டி, காமராஜ் நகர், வடக்கு லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும், மணப்பாறை - மதுரை சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 21-வது வார்டு மக்களும், அதே சாலையில் 20-வது வார்டு மக்களும் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், விராலிமலை சாலை எம்ஜிஆர் நகர், மஞ்சம்பட்டி பகுதியில் மஞ்சம்பட்டி, சிகாம்பட்டி உள்ளிட்ட பகுதிகள், மணப் பாறை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close