[X] Close

இப்படிப்பட்ட முதல்வரைப் பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?- ராமதாஸ் கிண்டல்


ramadoss-slams-eps

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Nov, 2018 11:24 am
  • அ+ அ-

புயல் பாதித்த மாவட்டங்களை 5 நாட்கள் கழித்து முதல்வர் பார்வையிடச் செல்வது தொடர்ந்து விமர்சனமாகிவரும் நிலையில், இப்படிப்பட்ட முதலமைச்சரை பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? என கிண்டல் செய்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், "கஜா புயலால் பாதிக்கப்பட்டப்பகுதிகளை 100 மணி நேரம் கழித்து முதலமைச்சர் பழனிச்சாமி பார்வையிடுகிறார். மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆதரவாளர்கள் மட்டும் புடைசூழ வலம்வருகிறார். பாதிக்கப்பட்ட மக்கள் மீது என்னவொரு அக்கறை? இப்படிப்பட்ட முதலமைச்சரை பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?" எனப் பதிவிட்டிருக்கிறார்.

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதற்காக அவர் இன்று காலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து வாகனம் மூலம் முதலாவதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குளம், மச்சுவாடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்டவை அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், அம்மாவட்டத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ஆய்வின்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close