[X] Close

புயல் நிவாரணத்துக்கு ஆட்சியரிடம் உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய குழந்தைகள்


kids-donate-their-savings-for-gaja-relief

கஜா புயலில் பாதித்தோருக்கு உதவுவதற்காக உண்டியலில் சேர்த்த ரூ.7.200-ஐ நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய நிறைநெஞ்சன், சாதனா.

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 11:04 am
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை ஆட்சியரிடம் அரியலூரைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவரும் நேற்று வழங்கினர்.

கஜா புயலால் நாகை, திரு வாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு மட்டுமன்றி தொண்டு நிறுவனங் கள், தன்னார்வலர்கள் என பலரும் உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் எம்.விஜய லட்சுமியிடம் அரியலூர் வழக்கறி ஞர் ஜெயக்குமாரின் குழந்தை களான 9-ம் வகுப்பு படிக்கும் நிறைநெஞ்சன், 4-ம் வகுப்பு படிக் கும் சாதனா ஆகிய இருவரும் தாங்கள் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ.7.200-ஐ நேற்று வழங்கினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பலரும் இருவரையும் பாராட்டினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close