ராமேசுவரம்: ராமேசுவரத்தில் அதிக குதிரை திறன் இன்ஜின் பொருத்திய 4 விசைப் படகுகளின் இன்ஜின்களை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 193 குதிரை திறன் கொண்ட இன்ஜின்களும், 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 120 குதிரை திறன் கொண்ட இன்ஜின்களும் பொறுத்தப்பட்டுள்ளன.
இதில் சில விசைப்படகுகள் பழைய படகுகளுக்கு பதிலாக புதிய படகுகளை வாங்கும் போது அதிகளவில் தடை செய்யப்பட்ட 280 குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பொறுத்தி பயன்படுத்துகின்றனர்.
இதனால் மீனவர்கள் மத்தியில் பிரட்சினை ஏற்படுவதுடன், சட்ட ஒழுங்கும் பாதிப்பு, இரு நாட்டு மீனவப் பிரச்சினைக்கும் இவை இடையூறாக இருக்கும் என்பதால் அதிகளவு குதிறை திறன் பயன்படுத்தும் படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும், என மீனவ சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேசுவரம மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தியா லியோன், காலீன்ஸ், அருள் ரிஷப், பிரபாகர் ஆகியோரது விசைப்படகுகளில் அதிகளவில் குதிரை திறன் இன்ஜின்கள் பொருத்தியிருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.