பிரதமர் மோடி அழைப்பு முதல் உளவுத் துறை இயக்குநர் பதவிக் காலம் நீட்டிப்பு வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு: போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய - பாகிஸ்தான் எல்லைகளின் மூன்று நிலைகளில் நடத்தப்படும் கொடியிறக்க நிகழ்வு (Retreat ceremony) இன்று மாலை முதல் மீண்டும் தொடங்கும் எனவும், நாளை முதல் பொதுமக்கள் இதனைக் காண அனுமதிக்கப்படுவர் என்றும் எல்லைப் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை என்பது, வக்பு சொத்துகளை நீக்கும் அதிகாரம், வக்பு கவுன்சிலில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இடம் பெறுவது, அரசு நிலமா என்பதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது ஆகிய 3 அம்சங்கள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் மறைவு: டாக்டர் ஸ்ரீனிவாசன் செப்டம்பர் 1955ல் அணுசக்தித் துறையில் சேர்ந்தார். இந்தியாவின் முதல் அணு ஆராய்ச் சி உலையான அப்ச ராவின் கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது டாக்டர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி அழைப்பு: இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார். உலகிற்கு யோகாவை வழங்கிய நாட்டிலிருந்து, அனைத்து நாடுகளையும் பங்கேற்க அழைக்கிறேன். என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உளவுத் துறை இயக்குநர் பதவிக் காலம் நீட்டிப்பு: மத்திய உளவுத் துறை இயக்குநர் தபன் குமார் டேகாவின் பதவிக்காலம் ஜூன் 2026 வரை ஓராண்டுக்கு நீடிக்கும். டேகாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தை கையாளுவதில் டேகா நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால், ஜம்மு காஷ்மீர் விவகாரங்களில் அரசின் முக்கிய நபராக அவர் இருந்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

x