மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
''வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை'' - மின்துறை அமைச்சர்: கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அதிமுக மே 23-ல் ஆர்ப்பாட்டம்: அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் திணறி வரும் திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் அதிமுக சாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் திணறி வரும் திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு: புதுச்சேரியில் தற்போது 12 பேர் கரோனா சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக புதுச்சேரி சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். மேலும், கரோனா பாதிப்பு அறிவுரைகள் ஏதும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை .காய்ச்சல், சளி எனில் அச்சப்பட தேவையில்லை. உரிய சிகிச்சை பெற்றால் உடனே சரியாகிவிடும். அத்துடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
‘தமிழகத்தில் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.9 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு’: நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தின் கடன் திட்ட இலக்கு ரூ.9 லட்சம் கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வங்கிகள் அதிக முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.