பெரியாறு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்காவிட்டால் போராட்டம்: விவசாயிகள் சங்கம்


குமுளி: பெரி​யாறு அணை பராமரிப்பு பணிக்​கான சுற்​றுச்​சூழல் அனு​ம​தியை 4 வாரங்​களில் வழங்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது. இதை கேரள அரசு பின்​பற்​றா​விட்​டால், தொடர் போராட்​டங்​களில் ஈடு​படு​வோம் என்று பெரி​யாறு வைகை பாசன விவ​சா​யிகள் சங்​கம் தெரி​வித்​துள்​ளது.

மழைக்​காலம் தொடங்​கும் முன்பு முல்லை பெரி​யாறு அணை​யின் பராமரிப்​புப் பணி​களை மேற்​கொள்ள உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உச்சநீதி​மன்​றம், அணை​யில் பராமரிப்பு பணிக்கு இடையூறாக உள்ள மரங்​களை வெட்​டு​வது, வல்​லக்​கடவு வனச் சாலையை சீரமைப்​பது உள்​ளிட்ட பணி​களுக்​கான சுற்​றுச்​சூழல் அனு​ம​தியை 4 வாரங்​களில் கேரள அரசு வழங்க வேண்​டும் என்று நேற்று உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை ஏற்று கேரள அரசு உரிய ஒப்​புதலை அளிக்​கா​விட்​டால் போராட்​டத்​தில் ஈடு​படப் போவ​தாக பெரி​யாறு வைகை பாசன விவ​சா​யிகள் சங்​கத்​தினர் அறி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து பெரி​யாறு வைகை பாசன விவ​சா​யிகள் சங்​கத் தலை​வர் மனோகரன் கூறும்​போது, “உச்ச நீதி​மன்​றத்​தின் சிறப்​பான தீர்ப்பு இது. அதே​நேரம், 2006-ம் ஆண்​டிலிருந்து எத்​தனையோ தீர்ப்​பு​களை, வழி​காட்​டு​தலை உச்ச நீதி​மன்​றம் வழங்கி இருந்​தா​லும், அதை கேரள அரசு முறை​யாகப் பின்​பற்​று​வது இல்​லை. இந்த முறை உச்ச நீதி​மன்​றத்​தின் வழி​காட்டு நெறி​முறை​களை கேரள அரசு பின்​பற்​றா​விட்​டால், தொடர் போராட்​டங்​களை நடத்த உள்​ளோம்" என்​றார்.

x