ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 6,000 கன அடியாக உயர்வு


தரு​மபுரி / மேட்​டூர்: ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து விநாடிக்கு 6,000 கனஅடி​யாக உயர்ந்​துள்​ளது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் கடந்த 13-ம் தேதி காலை விநாடிக்கு 700 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, 14-ம் தேதி 1,000 கனஅடி​யாக​வும், 15-ம் தேதி 5,000 கனஅடி​யாக​வும் உயர்ந்​தது. 16-ம் தேதி அதே அளவுடன் நீடித்த நீர்​வரத்து நேற்று காலை விநாடிக்கு 6,000 கனஅடி​யாக உயர்ந்​துள்​ளது.
இதனிடையே, மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 3,306 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 3,479 கனஅடி​யாக அதி​கரித்​தது.

108.31 அடி நீர்மட்டம்: அணையி​லிருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. தண்​ணீர் திறப்​பை​விட நீர் வரத்து அதி​க​மாக உள்​ள​தால் நீர்​மட்​டம் உயர்ந்து வரு​கிறது. அணை நீர்​மட்​டம் நேற்று 108.31 அடி​யாக​வும், நீர் இருப்பு 76.03 டிஎம்​சி​யாக​வும்​ இருந்​தது.

x