பாமக மீது சேகர்பாபு விமர்சனம் முதல் அமைச்சரின் ‘டாஸ்மாக்’ விளக்கம் வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


பாமக மீது சேகர்பாபு விமர்சனம்: முதலில் பாமகவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி, தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும். அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே வெட்டு, குத்து நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடியும்? என்று தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

டாஸ்மாக் ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும்: அன்புமணி: டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். அந்த வழக்குகளில் நீதி கிடைக்காது. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு வரும் ஜூன் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வீர தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு ரூ. 5,00,000 ரொக்கப்பரிசுடன் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் விருதாளருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் அருகே விபத்து: 4 பேர் உயிரிழப்பு: ரூர் அருகே ஆம்னி பேருந்தும் சுற்றுலா வேனும் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர், சிறுவன், சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வாங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் முத்துசாமி கண்டனம்: டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், 1000 கோடி ருபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது, என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

x