தங்கம் பவுனுக்கு ரூ.880 அதிகரிப்பு


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.69,760-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.8,720-க்கும், பவுனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.69,760-க்கும் விற்பனையானது.

24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.76,096-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று மாற்றமில்லை. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக இருந்தது. வைகாசியில் அதிக திருமணங்கள் நடைபெறும் என்பதால் விலை உயர்வு இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து
உள்ளனர்.

x