மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளி சேர்க்கை அறிவிப்பு ஏமாற்றும் செயல்: ராமதாஸ்


சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தில் புதிய பயனாளி​களின் சேர்க்​கைக்​கான அறி​விப்பு ஏமாற்​றும் செய​லாகும் என பாமக நிறு​வனர் ராமதாஸ் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழக அரசின் பட்​ஜெட்​டில் வெளி​யிடப்​பட்ட புள்​ளி​விவரங்​களின்​படி, மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தில் பயனடை​யும் குடும்​பத் தலைவி​களின் எண்​ணிக்கை 1.15 கோடி. இவர்​களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் நிதிவழங்க ரூ.13,800 கோடி தேவை. ஆனால் 2025-26-ம் ஆண்​டுக்​கான தமிழக அரசின் பட்​ஜெட்​டில் இந்த திட்​டத்​துக்​காக ரூ.13,807 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதில் தேவையை விட ரூ.7 கோடி மட்​டுமே அதி​க​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த தொகையை கொண்டு 5,833 பேருக்கு மட்​டும் தான் கூடு​தலாக உரிமைத் தொகையை வழங்க முடி​யும். இந்​நிலை​யில் மகளிர் உரிமைத் திட்​டத்​தில் புதிய பயனாளி​களை சேர்ப்​ப​தற்​கான விண்​ணப்​பங்​கள் வரும் ஜூன் 4-ம் தேதி முதல் பெறப்​படும் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. இந்த திட்​டத்​துக்​காக தமிழகம் முழு​வதும் 9 ஆயிரம் மையங்​களில் விண்​ணப்​பங்​கள் பெறப்​படு​கின்​றன.

அதன்​படி ஒவ்​வொரு மையத்​தி​லும் 100 தகு​தி​யான விண்​ணப்​பங்​கள் பெறப்​படு​வ​தாக வைத்​துக்​கொண்​டாலும் 9 லட்​சம் பேருக்கு கூடு​தல் உரிமை தொகை தர வேண்​டும். ஆனால் அரசு ஒதுக்​கி​யுள்ள நிதி​யைக் கொண்டு 9 ஆயிரம் பேருக்கு கூட வழங்க முடி​யாது. இது மக்​களை ஏமாற்​றும் செயல். கூடு​தல் பயனாளி​களுக்கு உரிமைத் தொகை வழங்க நிதி எங்​கிருந்து கிடைக்​கும்? என்பது உள்​ளிட்ட கேள்வி​களுக்கு அரசு விடையளிக்க வேண்​டும்​.

x