தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைந்தது


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ரூ.68,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின், விலை ஏற்ற, இறக்கமாகவே உள்ளது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலையில் நேற்று சரிவு ஏற்பட்டது. அதன்படி, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ரூ.68,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் 8,610-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் விலை ரூ.75,144 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.108 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாகவும் இருந்தது.

x