உதகை 127-வது மலர் கண்காட்சி முதல் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


தங்கம் விலை பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது: சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதகை 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சியை தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. மலர் கண்காட்சியை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார்.

கடலூர் சிப்காட் விபத்தில் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்: கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது, 100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

வனத்துறை ஊழியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்: வனத்துறையில் பணியாற்றும் வனக்காவலர், வனக்காப்பாளர் உட்பட அனைவரும் பணியின் போதும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஐகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

x