செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க முன்னாள் ராணுவத்தினர் வலியுறுத்தல்


ராணுவத்தினருக்கு எதிராக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு தேர்தலில் ஆதரவளிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் முன்னாள் கர்னல் சி.டி.அரசு தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, நமது ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டது. பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மீண்டும் பாகிஸ்தான் சீண்டினால் மிகக் கடுமையான பதிலடி தரப்படும். முன்னாள் படை வீரர்களாகிய நாங்கள் முப்படைகளு க்கும் தேவையான உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளோம் என உறுதியளித்துள்ளோம்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ”நமது ராணுவ வீரர்கள் சண்டை போட்டார்களா ?" என்பது போன்ற சில விரும்பத்தகாத கருத்துகளை தெரிவித்திருப்பதை கண்டிக்கிறோம். அவரின் இக்கருத்து இந்நாள், முன்னாள் படை வீரர்களுக்கு கடும் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது. அவர், தனது கருத்தை திரும்பப் பெறுவதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அவரை ஆதரிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

x