முன்னாள் தலைமை செயலர் இறையன்பு தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்


சேலம்: தமிழக அரசின் முன்​னாள் தலை​மைச் செயலர் இறையன்​பு​வின் தந்தை வெங்​க​டாசலம் நேற்று கால​மா​னார். சேலம் சூரமங்​கலம் சுப்​பிரமணிய நகரில் வசித்து வந்த வெங்​க​டாசலம் (91) வயது​மூப்பு காரண​மாக நேற்று மதி​யம் கால​மா​னார். அவரது மனைவி பேபிசரோஜா, மூத்த மகள் பைங்​கிளி, கடைசி மகன் அருட்​புனல் ஆகியோர் ஏற்​கெனவே உயி​ரிழந்து விட்​டனர்.

மகள்​கள் பைங்​கிளி, இன்​சுவை ஆகியோர் கல்​லூரி பேராசிரியர்​களாக இருந்து ஓய்​வு​ பெற்​றவர்​கள். மகன்​கள் திருப்​பு​கழ், இறையன்பு ஆகியோர் ஐஏஎஸ் அதி​காரி​களாக இருந்து ஓய்வு பெற்​றவர்​கள். வெங்​க​டாசலம் உடலுக்கு அமைச்​சர்​கள் ராஜேந்​திரன், மா.சுப்​பிரமணியன் அஞ்​சலி செலுத்​தினர்.

தமிழக முதல்​வர்மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில், “சா​தாரண குடும்​பத்​தைச் சேர்ந்த வெங்​க​டாசலம், தனது உழைப்​பால் இரு மகன்​களை இந்​திய ஆட்​சிப் பணி​யாளர்​களாக​வும், மகள்​களைப் பேராசிரியர்​களாக​வும் உரு​வாக்​கி, சமூகத்​துக்கு அளித்​துள்​ளார். அவரை இழந்து தவிக்​கும் இறையன்​பு, திருப்​பு​கழ் மற்​றும் குடும்​பத்​தார், நண்​பர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை​தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

x