சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கொடைக்கானலில் ‘பாரா செயிலிங்' சாகச நிகழ்ச்சி


‘பாரா செயிலிங்’ சாகச நிகழ்ச்சி

கொடைக்கானல்: சுற்​றுலாப் பயணி​களை மகிழ்விக்க கொடைக்​கானலில் ‘பாரா செயி​லிங்’ எனும் பாராசூட் சாகச நிகழ்ச்சி நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. மலைகளின் இளவரசி என அழைக்​கப்​படும் கொடைக்​கானலில் விரை​வில் கோடை விழா மற்​றும் 62-வது மலர்க் கண்​காட்சி நடை​பெற உள்​ளது. கோடை காலத்தை முன்​னிட்டு சீசனை அனுபவிக்க கொடைக்​கானலுக்கு சுற்​றுலாப் பயணி​கள் அதிக அளவில் வந்து கொண்​டிருக்​கின்​றனர்.

இந்​நிலை​யில், கொடைக்​கானல் வரும் சுற்​றுலாப் பயணி​களை மகிழ்விக்க தனி​யார் நிறு​வனத்​துடன் இணைந்​து, தமிழக சுற்​றுலாத் துறை பாராசூட் சாகச (பாரா செயி​லிங்) நிகழ்ச்​சியை நாளை முதல் 19-ம் தேதி வரை 4 நாட்​களுக்கு கொடைக்​கானலில் உள்ள மூஞ்​சிக்​கல் மைதானத்​தில் நடத்த உள்​ளது.

காற்​றின் வேகம், சீதோஷ்ண நிலையை பொறுத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்​றுலாப் பயணி​கள் பாராசூட் சாகசப் பயணத்தை மேற்​கொள்ள திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 15 முதல் 60 வயது வரை​யுள்ள இரு​பாலரும் பங்​கேற்​கலாம்.

வானில் பறந்​த​வாறு கொடைக்​கானலின் இயற்கை அழகை ரசிக்​கலாம். விருப்​ப​முள்​ளவர்​கள் 73733 90531 என்ற எண்​ணில் முன்​ப​திவு செய்​ய​லாம். சுற்றுலாப் பயணி​களை எவ்​ளவு துாரம் பறக்க வைக்​கலாம் என பாராசூட்​டில் பறந்து ஆய்வு செய்து வரு​வ​தாக சுற்​றுலாத் துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

x